ADDED : அக் 19, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்தவர் காந்தி மகன் மவுலி, 26; இவர் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் லோகேஷ், 25; என்பவருடன் புதுச்சேரி - கடலுார் சாலையில், கடலுார் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
கங்கணாங்குப்பம் அருகே வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடன்ல கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மவுலி இறந்தார்.
ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.