/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்
ADDED : அக் 19, 2025 03:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரிமா சங்கம், ரோஸ்கண்ணன் நினைவு அறக்கட்டளை, வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி ஒப்பந்த துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கமிஷனர் கிருஷ்ணராஜன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி துாய்மைப் பணியாளர்கள் 75 பேருக்கு புடவை, வேட்டி, இனிப்புகளை வழங்கினார்.
அறக்கட்டளை நிறுவனர் ரவிசங்கர், வர்த்தக சங்க பொருளாளர் ஆசாத், அரிமா சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன், ஸ்ரீதர், சிவலிங்கம் பங்கேற்றனர்.