/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : அக் 12, 2025 10:42 PM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், மாவட்ட தொழில் நுட்ப செயலாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.
கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் நுட்ப செயலாளர் கிருபானந்தன் ஆகியோர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்டத்தில், நகர இளைஞரணி செயலாளர் சங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர், ரவி, கூட்டுறவு வங்கி முன்னாள் துணை தலைவர் கோதண்டம், ஒன்றிய தொழில் நுட்ப செயலாளர் வசந்த், நிர்வாகிகள் ஞானதேசிங்கு, கல்யாணம், சக்திவேல், சிவராஜ், விஜய் உட்பட பலர் பங்கேற்றனர்.