/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு
/
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : அக் 12, 2025 10:41 PM

மந்தாரக்குப்பம்; விருத்தாசலம் வானொலி திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இதுகுறி்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அ.தி.மு.க., 54 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் வரும் 17 ம் தேதி மாலை 6:00 மணியளவில் விருத்தாசலம் வானொலி திடலில் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது.
அ.தி.மு.க.,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளளர் பரமசிவம், பேச்சாளர்கள் சிட்கோ சீனு.தாராபுரம் முத்துமணிவேல், நவீன் பிரசாத் பேசுகின்றனர்.
இதில் அ.தி.மு.க.,.தலைமை நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மண்டல, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட கிளை நிர்வாகிகள்,வார்டு நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி பிரிதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்க பிரிதிநிதிகள், செயல்வீரர்கள் கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளார்.