/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு நிலுவைத் தொகை வழங்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
/
கரும்பு நிலுவைத் தொகை வழங்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
கரும்பு நிலுவைத் தொகை வழங்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
கரும்பு நிலுவைத் தொகை வழங்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : ஏப் 11, 2025 11:29 PM

சேத்தியாத்தோப்பு: எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., சர்க்கரை எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்கமாக விவசாயிகள் 10,000 ஏக்கர் வரை கரும்பு பயிரிட்டு வந்தனர்.
2024-2025ம் ஆண்டு நடப்பு அரவை பருவத்தில் ஆலையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வெறும் 4,627 ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்பட்டுள்ள பரப்பு மிகவும் குறைந்துள்ளது.
வேர் புழு, மஞ்சள் அழுகல் ஆகிய நோய் தாக்குதலை அரசு கட்டுப்படுத்த தவறியதால் கரும்பு விவசாயம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 18 கோடி ரூபாய் நிலுவைத் தொகை மற்றும் கரும்பு ஏற்றி சென்ற வாகன வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
இது ஏற்புடையதல்ல. நிலுவைத் தொகையை உடனடியாக வழங் வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

