/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழனிசாமிக்கு இன்று வரவேற்பு மேற்கு அ.தி.மு.க., ஏற்பாடு
/
பழனிசாமிக்கு இன்று வரவேற்பு மேற்கு அ.தி.மு.க., ஏற்பாடு
பழனிசாமிக்கு இன்று வரவேற்பு மேற்கு அ.தி.மு.க., ஏற்பாடு
பழனிசாமிக்கு இன்று வரவேற்பு மேற்கு அ.தி.மு.க., ஏற்பாடு
ADDED : ஜூலை 14, 2025 05:35 AM
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிக்கு இன்று வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது என, மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம். எல்.ஏ., கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனை முன்னிட்டு இன்று (14ம் தேதி) மாலை 4:00 மணிக்கு வடலுாரில் இருந்து வருகை தரும் அவருக்கு கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கெங்கைகொண்டான் பேரூராட்சியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
5:00 மணிக்கு விருத்தாசலம் பாலக்கரையிலும், திட்டக்குடி பஸ் நிலையம் அருகில் 6:00 மணிக்கும் பேசுகிறார். இவரை வரவேற்க நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.