ADDED : டிச 07, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி, அண்ணா பல்கலை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், புகையிலை எதிர்ப்பு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கல்லுாரியில் துவங்கிய பேரணிக்கு சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சித்திவிநாயகம் வரவேற்றார்.சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் பேரணியை
துவக்கி வைத்தார்.
நிகழ்வில், கல்லுாரி நிர்வாக அதிகாரிகோகுல கண்ணன், மேலாளர் விஸ்வநாத்தேசிய மாணவர் படை அதிகாரி ராஜ்குமார்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரபு நன்றி கூறினார்.பேரணி, காட்டுமன்னார்கோவில் முக்கிய வீதிகளின் வழியாக,பஸ் நிலையம் வரை சென்றது.
மாணவர்கள் பதாகைகள் ஏந்திபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

