தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிய நடைமுறை அமல் மது பிரியர்கள் அவதி

புதிய நடைமுறை அமல் மது பிரியர்கள் அவதி

புதிய நடைமுறை அமல் மது பிரியர்கள் அவதி


ADDED : நவ 01, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 06:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: டாஸ்மாக் கடைகளில் சரக்குகளை ஸ்கேன் செய்து விற்பனை செய்யும் நடைமுறையால், மதுபிரியர்கள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று (நவ.,1) முதல் மது பாட்டில்களை ஸ்கேன் செய்து விற்பனை செய்வது, காலிபாட்டில்களை திரும்ப பெரும்போது ஸ்கேன் செய்து பெறுவது உள்ளிட்ட நடைமுறைகள், அமலுக்கு வந்தன.

இந்த புதிய நடைமுறை வந்த முதல் நாளே, சிதம்பரம், புதுச்சத்திரம், முட்லுார் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில், டாஸ்மாக் கடைகள் திறக்க தாமதமானது.

மேலும் திறக்கப்பட்ட ஒரு சில கடைகளிலும், சரக்குகளை ஸ்கேன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மது பிரியர்களுக்கு சரக்குகளை விற்பனை செய்ய முடியவில்லை. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆனால் புதிய நடைமுறையால் சரக்கு வாங்க வந்த மது பிரியர்கள், சரக்கு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us