/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 26, 2025 07:37 AM

புவனகிரி: கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர்.
கீரப்பாளையத்தில் தி.மு.க., கிழக்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சபாநாயகம் தலைமை தாங்கினார். ஆயிப்பேட்டை கிளை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
அவைத் தலைவர் ஞானசேகரன், நிர்வாகிகள் நடராஜன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைய பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஆயிப்பேட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வமணி தலைமையில், அ.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் விலகி ஒன்றிய செயலாளர் சபாநாயகம் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.