/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்று கட்சியினர் வி.சி.,யில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் வி.சி.,யில் ஐக்கியம்
ADDED : ஜூலை 13, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மாற்றுக்கட்சி பிரமுகர்கள், அக்கட்சிகளில் இருந்து விலகி வி.சி.,யில் இணைந்தனர்.
விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு, வி.சி., மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். அதில், விருத்தாசலம தெற்கு பா.ஜ., ஒன்றிய துணைத் தலைவர் குணசேகரன், கோவிந்தராஜ் மற்றும் த.வெ.க., கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி, வி.சி., கட்சியில் இணைந்தனர்.
ஒன்றிய பொருளாளர் சக்திவேல், துணை செயலாளர் தென்றல், மாவட்ட துணை அமைப்பாளர் துரைமுருகன், நகர துணை செயலாளர் இளங்கோவன், கர்ணன், ராகுல் உடனிருந்தனர்.

