ADDED : ஜூன் 30, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அருகே அங்கன்வாடி மைய பணியாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த புத்தேரியைச் சேர்ந்தவர் கோடிப்பிள்ளை மனைவி ஜெயந்தி, 42; இவர், தொளார் அங்கன்வாடி மையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடக்குவாத நோயால் பாதித்து, சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் குணமாகவில்லை. மனமுடைந்த ஜெயந்தி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு திடுக்கிட்ட குடும்பத்தினர் மீட்டு தொளார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஜெயந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.