/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பத்திரக்கோட்டை பள்ளியில் ஆண்டு விழா
/
பத்திரக்கோட்டை பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 24, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : பழையபத்திரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த பழையபத்திரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார்.
பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ராணி,ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வளர் கவிதா,விஜயலட்சுமி,உதவி ஆசிரியர் நஜிமுன்னிசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

