/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொலைதுார கல்வி மையத்தில் விண்ணப்பம் விற்பனை
/
தொலைதுார கல்வி மையத்தில் விண்ணப்பம் விற்பனை
ADDED : ஜூன் 28, 2025 12:36 AM

சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதுார மற்றும் இணையவழி கல்வி மையத்தில் தொலைதுாரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவக்க விழா நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதுார மற்றும் இணையவழி கல்வி மையம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகள் பருவ முறையில் துவங்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் தொலைநிலைக் கல்விக்குழு அனுமதி வழங்கியது.
இதன் மூலம் 22 பாடப்பிரிவுகள் முதுகலை வகுப்புகள், ஐந்து பாடப்பிரிவுகள் இளங்கலை வகுப்புகள் மற்றும் இதனுடன் 115 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொலைதுார கல்வி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அருட்செல்வி இணையதளம் வாயிலாக துவக்கி வைத்தார். விழாவில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார், கல்விசார் இயக்குனர் முல்லைநாதன், தொலைதுார மற்றும் இணையவழி கல்வி இயக்குனர் சீனிவாசன், இணை இயக்குனர் விஜயன், துணை இயக்குனர் சீனிவாசன், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.