/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.முட்லுார் அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சி.முட்லுார் அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
சி.முட்லுார் அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
சி.முட்லுார் அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 22, 2025 11:27 PM
கிள்ளை: சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் லலிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், 2025-2026ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு (இணைய வழியில்) கடந்த 7ம் தேதி முதல் 27ம் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அனைத்து பாடங்களுக்கும் https://www.tngasa.in என்ற ஒருங்கிணைந்த இணைய முகப்பு வாயிலாக ஒரே விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப பதிவு, விண்ணப்ப கட்டணம், பாடப்பிரிவுகள் தேர்வு செய்தல் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்தல் ஆகியவை உள்ளடக்கிய அனைத்து செயல்முறைகளையும் இதே இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.
சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியில் 14 இளநிலை பாடப்பிரிவுகள், 10 முதுநிலை பாடப் பிரிவுகள், 8 ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் உள்ளன.
இதில், 3,850க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நடப்பு கல்வியாண்டில் (2025-2026) பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.ஏ., பொருளாதாரம் (தமிழ்வழி, ஆங்கில வழி), பி.காம்., பி.பி.ஏ., (ஆங்கிலவழி), பி.எஸ்.சி., கணிதம் (தமிழ்வழி, ஆங்கில வழி), புள்ளியல், இயற்பியல், வேதியியல், தொழில் முறை வேதியியல் (ஆங்கில வழி), தாவரவியல் (தமிழ் வழி, ஆங்கில வழி), கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது.
சுழற்சி 2ல்- பி.ஏ., தமிழ், பி.பி.ஏ., இயற்பியல், வேதியியல், தாவரவியல் (ஆங்கில வழி) ஆகிய புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.