UPDATED : நவ 02, 2026 06:46 PM
ADDED : நவ 02, 2026 06:41 PM
கடலுார்: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும், திருவள்ளுவர் தினத்தன்று அம்பேத்கர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான அம்பேத்கர் விருது வரும் 27 ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை. தமிழ்நாடு அரசின் www.tn.gov.in இணையதளத்தில் https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ== என்ற இணைப்பை (Link) கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் நல இயக்குனரக அலுவலகம்,சேப்பாக்கம் சென்னை-600 005-ல் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு தாங்கள் ஆற்றிய தொண்டிற்கான சான்றுகளை இணைத்து வரும் 10ம் தேதி மாலை 5.45க்குள் கடலுார் கலெக்டர் அலுவலகம், 2ம் தளத்தில் அறை எண் 310ல் சமர்ப்பிக்க வேண்டும்.
