தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : செப் 24, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், செப். 23–

கடலுார் மாவட்டத்தில் சமூக நீதிக்கான பெரியார் விருதிற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கவுரவிக்கும் வகையில் ‘சமூக நீதிக்கான பெரியார் விருது’ 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். விருதாளர் முதல்வரால் தேர்வு செய்யப்படுவர்.

கடந்த 2025ம் ஆண்டிற்கு விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதியுடைய நபர்கள் தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் 2ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வரும் அக்.20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us