மக்கள் தொகை கணக்கெடுப்பு வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி
மக்கள் தொகை கணக்கெடுப்பு வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி
ADDED : செப் 24, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், நடந்த முகாமை, தாசில்தார் முருகன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் விஜயா, கணினி இயக்குனர் சுரேஷ், விருத்தாசலம் தெற்கு வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
சென்னை மக்கள்தொகை கணக்கெடுப்பு துணை இயக்குனர் சோமசுந்தரி, மொபைல் ஆப்பில் மக்கள் தொகை பதிவேற்றம் செய்வது குறித்து, வி.ஏ.ஓ., க்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதில், வி.ஏ.ஓ., க்கள், வருவாய்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
