/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மானியத்தில் கோழிகுஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம்
/
மானியத்தில் கோழிகுஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 27, 2024 04:27 AM
கடலுார் : ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழி குஞ்சுகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு 40 நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கப்படும். பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும், விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே கிராமத்தில் வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
பயனாளி சொந்த செலவில் 3200 ரூபாய் செலவில் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுய சான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50 சதவீத மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்கு முன்பு இலவச கறவைமாடு, ஆடு, செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப் பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்கக் கூடாது.
ஆதார் அட்டை நகல், ஜாதி சான்று நகல், விதவை அல்லது வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, புகைப்படம் -2, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.