ADDED : பிப் 04, 2024 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், அண்ணாமலை பல்கலைக்கழக கட்டடவியல் துறையில், சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்ட கலைவாணி, சிறந்த நில அளவையாளர்கள் 6 பேருக்கு பாராட்டு விழா நடந்தது.
பேராசிரியர் ஞானகுமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாலகுமார் முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக, கட்டடவியல் துறை தலைவர் பூங்கோதை பங்கேற்று, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார். விழாவில், பேராசிரியர்கள் ஏழிசை வல்லபி, லதா, ஷீலா உட்பட பலர் பங்கேற்றனர்.