
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில், ஓய்வுப்பெற்ற துப்பரவு ஆய்வாளர் ஜோதிக்கு நேற்று பிரிவு உபசார விழா நடந்தது.
செயல் அலுவலர் மயில்வாகனன் தலைமை தாங்கி, ஓய்வுப்பெற்ற துப்பரவு ஆய்வாளர் ஜோதியை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் தமிழரசி வரவேற்றார். துப்பரவு மேற்பார்வையாளர் வீர ஆனந்தன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் செல்வகுமார், இளநிலை உதவியாளர்கள் கவிலயா, அபிராமன், பதிவரை எழுத்தர் குணசேரன், அலி அப்பாஸ் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

