
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
வட்டார தலைவர் ரவிசுந்தர் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட தலைவர் குருராஜன், வட்டார துணை தலைவர் ரூபிரோஸ்லின், துணை செயலாளர் சிற்றரசு முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் லுார்துராஜ் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் பேசினார். மாநில செயலாளர் ரஹீம், மாநில துணை தலைவர் அறிவழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிற்றரசன் வாழ்த்திப் பேசினர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கிறிஸ்டோபர், விஜயலட்சுமி, உமாதேவி, கலைவாணி, வளர்மதி ஆகியோர் ஏற்புரையாற்றினர். மாவட்ட தலைவர் தங்கதம்பி, செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் மைதிலி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் நலச் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், துணை தலைவர் திருசங்கு, முன்னாள் வட்டார தலைவர் அருள்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.
பொருளாளர் மெகருன்னிசா நன்றி கூறினார்.