/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிரீன்டெக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
கிரீன்டெக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 19, 2025 06:43 AM

கடலுார்: கடலுார் கிரீன்டெக் பள்ளியில் பத்தாம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுவிழா நடந்தது.
கடலுார் கிரீன்டெக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். அதில் மாணவர் திருச்செல்வன், மாணவிகள் தேன்விழி, தியாஸ்ரீ முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். வெற்றி பெற்ற மணாவர்களை பள்ளியின் பொருளாளர் ராமலிங்கம் சால்வை அணிவித்து பாராட்டினார். பள்ளி தாளாளர் அய்யப்பன், இயக்குநர்கள் உபைதுார் ரகுமான், செந்தில்குமார், அரவிந்த், கார்மேல் வின்சென்ட், முதல்வர் சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.