ADDED : நவ 12, 2025 07:51 AM

கடலுார்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நடந்த பாராட்டு விழாவில், கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜி.எஸ்.டி., 2.0 வரி சீர்திருத்தம் செய்தமைக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் பாராட்டு விழா நடந்தது.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கேரள வியாபாரி விவசாய ஏகோபன சமிதி, கர்நாடக உணவு தானிய வர்த்தக சம்மேளனம், சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம், புதுச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு, கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று வாழ்த்தினர்.
கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஜி.எஸ்.டி.,வரிக்குறைப்பு செய்ததற்காக, அவருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், நிர்மலா சீதாராமனுக்கு கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

