/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளக்காடாக மாறிய ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்; கொட்டும் மழையிலும் இளைஞர்கள் பங்கேற்பு

ADDED : ஜன 09, 2024 07:35 AM

கடலுார் : கடலுாரில் பெய்த கன மழையால் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெறும் இடம் வெள்ளக்காடாக மாறியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ராணுவ அதிகாரிகள் உடல் தகுதித் தேர்வை நடத்தினர்.
இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம், கடலுார், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 4ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. இதில் கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ராணுவ ஆள்சேர்ப்பிற்காக உடல் தகுதி மற்றும் சான்றிதழ்கள் சரி பார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் கடலுாரில் பலத்த காற்றுடன் 13 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அண்ணா விளையாட்டு மைதானம் வெள்ளக்காடாக மாறியது. ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் அமைக்கப்பட்டிருந்த கூடாரம் சரிந்து விழுந்தது. மைதானத்தில் மழை நீர் தேங்கியதால் ராணுவ ஆள் சேர்ப்பு பணி தடைபட்டது.
நேற்று காலை 7:00 மணிக்கு, தேர்வுக்கான இளைஞர்கள் மைதானத்திற்கு வந்தனர். அவர்களை ராணுவ அதிகாரிகள், ராணுவ வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு உடல் தகுதி தேர்வுக்கான ஓட்டத்தேர்வு நடத்தினர். இளைஞர்கள் கொட்டும் மழையில் ஓட்டப்பந்தய தேர்வில் பங்கேற்றனர்.
சில உடல் தகுதி தேர்வுகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தன. ராணுவ அதிகாரிகள் கொட்டும் மழையிலும் தொடர்ந்து உடல் தகுதி தேர்வை நடத்தினர்.