ADDED : அக் 16, 2025 11:46 PM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத்திருவிழா நடந்தது.
கலைத்திருவிழா கடந்த 6ம் தேதி தொடங்கி இரண்டு கட்ட போட்டிகளாக நடந்தது. இதில் பேச்சு, கவிதை, சிறுகதை, குறும்படம், பாட்டு, நடனம் என பல்வேறு நிலைகளில் 30 போட்டிகள் நடந்தன. நிறைவுவிழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.
விழாவின் ஒருங்கிணைப்பாளர் சிற்றரசு வரவேற்றார். கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினர் சாரதாராம் குழும உரிமையாளர் சுவேதகுமார் சிறப்புரையாற்றி, போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள் பூபாலன், செந்தில்குமார். நூலகர் நடராஜன், பேராசிரியர்கள் ஜோதி, சுபாலட்சுமி, சுப்பு லட்சுமி, யோகலட்சுமி மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் அறிவழகன், பாலாஜி, தர்மராஜ், வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி துறை இயக்குநர் சரவணன் நன்றி கூறினார்.