/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
கோமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : அக் 16, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, தாசில்தார் அரவிந்தன் தலைமை தாங்கினார்.பி.டி.ஓ.,க்கள் சங்கர், லட்சுமி, ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி, முகாமினை துவக்கி வைத்தார்.
இதில், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் சாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் வீரபாண்டியன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம், கிளை செயலர்கள் மணிகண்டன், வீரமுத்து, சங்கர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.