/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
/
பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
ADDED : அக் 16, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே முன்விரோத தகராறில் பெண்ணை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 31; அதேபகுதியை சேர்ந்தவர் தமிழ்வளவன், 23; ரேடியோ செட் போடுவதில் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி குடிபோதையில் இருந்த தமிழ்வளவன், அண்ணாமலை மனைவி பிரியதர்ஷினியை திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, தமிழ்வளவனை கைது செய்தனர்.