/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
ADDED : ஜன 14, 2025 06:44 AM

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
நேற்று, ஆருத்ரா தரிசன விழா நடந்தது. அதிகாலை, ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளிய நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகாபிஷேகம் நடந்தது.
பால், தேன், நெய், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் 9:00 மணி வரை நடந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மகாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு திருவாபரண அலங்காரம், சிறப்பு அர்ச்சனை நடந்தது.
சித்சபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது.
பஞ்சமூர்த்திகள் வீதியுலாவை தொடர்ந்து, மாலை 4:15 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் நடனமாடியபடி, பக்தர்களுக்கு காட்சி கொடுத்த ஆருத்ரா தரிசன நிகழ்வு நடந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, சித்சபை பிரவேசம் நடைபெற்றது.
இன்று முத்துப்பல்லக்கு வீதியுலா, நாளை, (15ம் தேதி) சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்பு தெப்பல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

