தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை விரைவில் துவங்க வேண்டும்: அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேட்டி

எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை விரைவில் துவங்க வேண்டும்: அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேட்டி

எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை விரைவில் துவங்க வேண்டும்: அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேட்டி


ADDED : நவ 20, 2026 05:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 05:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோ்பபு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் அரவையை துவங்கி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கூறினார்.

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்,கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மொத்தம் 60 ஆயிரம் டன் வரை மட்டுமே கரும்பு உற்பத்தி செய்துள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆலை நிர்வாகம் அரவை துவங்குவதற்கு முன் இரண்டு மாதத்திற்கு முன்பே பருவகால தொழிலாளர்களை பணியமர்த்தி இயந்திரங்கள் பழுது பார்ப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

இந்தாண்டு இதுவரை எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாத நிலையில் ஆலை இயங்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதனையறிந்த அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நேற்று காலை 10.30 மணிக்கு ஆலைக்கு சென்று, செயலாட்சியர் செந்தில்அரசனை சந்தித்து, ஆலை அரவைக்கு தேவையான கரும்பு இருப்பு, அரவை துவங்குவதற்கான ஆயுத்தபணி மற்றும் அரவை பணி எப்போது துவங்கும் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு செயலாட்சியர், வரும் டிசம்பர் 20 முதல் 26 தேதிக்குள் அரவை துவங்க உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அரவைக்கு தேவையான கரும்புகளை வெளி ஆலைகளிலிருந்து வாங்க திட்டமிட்டுள்ளதாக பதில் அளித்தார்.

பின்னர், எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் 2 லட்சம் முதல் 2.50 லட்சம் டன் கரும்பு வரை அரவை செய்து ஆலை லாபத்தில் இயங்கியது. அதன்பின் வந்த தி.மு.க., ஆட்சியில் படிப்படியாக குறைந்து கடந்தாண்டு 30 ஆயிரம் டன் மட்டுமே கரும்பு அரவை செய்துள்ளது.

அதனால், இந்தாண்டு கரும்பு அரவை துவங்காது என விவசாயிகள் தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் நிலையில், அரவையை துவங்கி விவசாயிகளை பாதுகாக்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேட்டியின்போது, ஆலையின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், முத்து, நகரசெயலாளர் மணிகண்டன், மாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us