/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உதவி மின் பொறியாளர் அலுவலகம் இட மாற்றம்
/
உதவி மின் பொறியாளர் அலுவலகம் இட மாற்றம்
ADDED : பிப் 06, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: ராஜேந்திரபட்டிணம் கிராம நுாலகத்தில் இயங்கிய உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட மின்துறை செயற் பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தில் உள்ள நுாலகத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் இயங்கி வந்தது.
இந்த அலுவலகம் தற்போது, ராஜேந்திரபட்டிணம் துணை மின் நிலைய பிரிவு அலுவலக கட்டடத்தின் ஒரு பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதனை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.