/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலியல் தொல்லை புகார் உதவி பேராசிரியர் கைது
/
பாலியல் தொல்லை புகார் உதவி பேராசிரியர் கைது
ADDED : ஜூன் 01, 2025 06:53 AM

சிதம்பரம் :சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக அளித்த புகாரின் பேரில், உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், 2018ம் ஆண்டு படித்தார். இவர், தற்போது, கொல்கத்தாவில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு, உதவி பேராசிரியர் பாலியல் புகார் அளித்ததாக, அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமாரிடம் நேற்று முன்தினம் மாணவி அளித்த மனுவில், 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் கடந்த 2018ம் ஆண்டு படித்தபோது, உதவி பேராசிரியராக பணிபுரிந்த ராஜா, 55; என்பவர் கட்டாயப்படுத்தி நெருங்கிப்பழகி, வீடியோ எடுத்து தற்போது மிரட்டுகிறார்' எனக் கூறியிருந்தார்.
எஸ்.பி., உத்தரவின் பேரில் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழரசி, மாணவியிடம் விசாரணை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் ராஜாவை போலீசார் நேற்று கைது செய்து, 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.