ADDED : ஜூலை 31, 2025 03:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், அண்ணாகிராம குறுவட்ட மைய அளவிலான தடகள போட்டிகள் நேற்று நடந்தது.
மாவட்டக் கல்வி அலுவலர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், போட்டிகளை துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு வகையான தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

