/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வரை அவதுாறு பேசிய ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி
/
முதல்வரை அவதுாறு பேசிய ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி
முதல்வரை அவதுாறு பேசிய ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி
முதல்வரை அவதுாறு பேசிய ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி
ADDED : ஆக 14, 2025 08:01 PM

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நாற்காலிகளை உடைத்த தி.மு.க.,வினரால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் கடை வீதியில், ஏழைகள் முன்னேற்ற கழகம், இந்திய மதச்சார்பற்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில், நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏழைகள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அர்ச்சுணன், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பன்னீர்செல்வம், வி.சி., தலைவர் திருமாவளவன் ஆகியோரை அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதில், ஆத்திரமடைந்த, தி.மு.க., மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் அக்கட்சியினர், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அர்ச்சுணன் பேசிய மைக்கை பிடுங்கி எறிந்து, நாற்காலிகளை உடைத்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் போலீசார், இருதரப்பையும் சமாதானம் செய்தனர். அர்ச்சுணன் மீது நடவடிக்கை கோரி, தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்தனர்.