தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பயன்படுத்தாமல் வீணாகும் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம்

பயன்படுத்தாமல் வீணாகும் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம்

பயன்படுத்தாமல் வீணாகும் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம்


UPDATED : நவ 10, 2026 06:17 PM

ADDED : நவ 10, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 06:17 PM ADDED : நவ 10, 2026 06:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் அமைக்கப்பட்ட தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது.

பண்ருட்டி அடுத்த பாலுார், சன்னியாசிப்பேட்டைஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் ஒன்றிய பொது நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பில், ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் தானாகவே ஒரு லிட்டர் குடிநீர் வழங்கும் விதத்தில், தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரத்தினை சாலை ஓரத்தில் அமைத்திருந்தால் இந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி இருப்பர்.

மேலும் அப்பகுதியை சுற்றி உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம், ரேஷன் கடை, குழந்தைகள் மையம், ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றிற்கு வரும் பொதுமக்களும் குடிநீரை பயன்படுத்துவார்கள்.

ஆனால் அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம்,பொதுமக்களின் கண்ணில் படாத இடமாக பார்த்து இந்த தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தினை அமைத்தனர். இதனால் இந்த இயந்திரம் பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த இயந்திரத்தின் அருகில், குடிநீர் நிரப்ப வைத்திருந்த சின்டெக் டேங்கை மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர்.

ஆகையால் அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகள் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us