தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருது வழங்கும் விழா 

விருது வழங்கும் விழா 

விருது வழங்கும் விழா 


ADDED : அக் 15, 2024 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 06:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரத்தில், அமிர்தாலயா நுண்கலை அகாடமி மற்றும் ஆருத்ராலயா அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.

சிதம்பரம் கோதண்டராமன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அமிர்தாலயா நுண்கலை அகாடமி நிறுவனர் பாரதி தலைமை தாங்கினார்.

சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக், சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு விருது வழங்கினர்.

விழாவில் பங்கேற்ற, 65 மாணவர்களுக்கு இளங்கலை சுடர் விருதும், 126 மாணவர்களுக்கு பங்கு பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதில், அமிர்த லோஜினிக்கு, 5; இளம் சேவைச் சுடர் விருது வழங்கப்பட்டது.

இவர் வயநாட்டில் ஏற்பட்ட பேரிடருக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி செய்து, அதன் மூலம் வந்த நிதியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கலை சார்ந்த மாணவர்களை ஊக்குவிக்கும் குருவிற்கு, கலைச் செம்மல் விருதும், பிற கலை நிறுவனங்களுக்கு கலை குருகுலம் விருதும் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us