ADDED : செப் 06, 2025 03:21 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
சங்க தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மண்டல ஆளுநர் புகழேந்தி, மண்டல செயலாளர் கலைச்செல்வன், சாசன செயலாளர் தீபக்குமார் முன்னிலை வகித்தார். செம்போர்டு பள்ளி முதல்வர் லதா வரவேற்றார்.
சிவபுரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன், பூலாமேடு அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்த கிராமப்புற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசு பேசினார். விழாவில், நிர்வாகிகள் சீனிவாசன், சுப்பையா, சண்முகசுந்தரம், ஏகாம்பரம், வன்னியநாதன், பாவிக் பட்டேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
துணைத் தலைவர் வேதாந்த தேசிகன் நன்றி கூறினார்.