/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 30, 2025 05:24 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராம விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவிகள், விருத்தாசலத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராம விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேளாண் மாணவிகள் சங்கவி, சரயு, சங்கவி, ஸ்ரீநிதி, சுபாஷினி, சுஜா, ஸ்வேதா, வாகீஸ்வரி, வினிதா, யாமாவதி ஆகியோர் மழைநீர் சேகரிப்பு, ஊராட்சியில் உள்ள தொழில்கள், அதன் செயல்விளக்கம் குறித்து கிராமப்புற மதிப்பீடு வரைந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

