UPDATED : ஆக 08, 2026 05:49 PM
ADDED : ஆக 08, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தினை மேல்நிலைபள்ளி உதவி தலைமை ஆசிரியர் விஜயராகவன் துவக்கி வைத்தார். உயர்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இதில் மாணவர்கள் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
பள்ளியின் போதை பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்,கமலகந்தன்,சசிகுமார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
