/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
/
மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : டிச 13, 2025 06:29 AM

கடலுார்: கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில், சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப் மற்றும் கன்ஸ்யூமர் கான்பிடேஷன் இந்தியா சார்பில் காலநிலை மாற்றம் குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் (பொறுப்பு) கோமதி தலைமை தாங்கினார். பேராசிரியர் கவிதா வரவேற்றார். சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப் செயலாளர் ரவி நோக்க உரையாற்றினார்.
தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, பெரியார் கல்லுாரி பேராசிரியர் ஜானகிராஜா பேசினர். தலைவர் பால்கி கருத்துரை ஆற்றினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற, 96 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சுப்புராயன், ராஜதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
பேராசிரியர் விமலா காயத்ரி நன்றி கூறினார்.

