/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
ADDED : டிச 13, 2025 06:29 AM

பரங்கிப்பேட்டை: புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களுக்கு பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது.
தமிழகத்தில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்புதிருத்தப்பணி நடந்தது.
அதையொட்டி, சிதம்பரம் சட்டசபை தொகுதியில் வீடு, வீடாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கான படிவங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, வாக்காளர்களிடம் இருந்து படிவங்கள் பெறப்பட்டு தாலுகா, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் 'அப்டேட்' செய்யப்பட்டது.
இந்நிலையில் பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது.
இம்முகாமில், பரங்கிப்பேட்டை குரு வட்டத்தை சேர்ந்த ஏராளமான வாக்காளர்கள் பங்கேற்றனர்.

