sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

/

 சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

 சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

 சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றும் பணி துவக்கம்


ADDED : டிச 13, 2025 06:32 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் சாலை விரிவாக்கப்பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றும் பணி துவங்கியது.

கீழ்புவனகிரியிலிருந்து - பரங்கிப்பேட்டை வரை சாலை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன் பின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பினர். தமிழக அரசு ரூ.23.50 கோடி ஒதுக்கீடு செய்தது.

கடலுார் கோட்டம், குறிஞ்சிப்பாடி உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள கீழ்புவனகிரியிலிருந்து பி.முட்லுார் வரை 12 கி.மீ., தொலைவிற்கு, 10 மீ., அகலத்தில் சாலை விரிவாக்கம் செய்ய கடந்த சில மாதங்களாக அளவீடு செய்தனர்.

சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன் குமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்து, இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி, பரங்கிப்பேட்டை பிரிவு அலுவலக உதவி பொறியாளர் ஜெகன் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை அமைய உள்ள மாதிரி வரை படத்தை காண்பித்து விளக்கம் அளித்தனர்.

மேலும், அகற்ற வேண்டிய மரங்கள் குறித்தும் அளவீடு செய்து எல்லை காண்பித்தனர். அதன் பின் ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நேற்று கீழ்புவனகிரியில் இடையூறாக உள்ள மரங்கள் வெட்டும் பணி துவங்கியது. துறை அதிகாரிகள் நேரில் உடன் இருந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us