/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்காச்சோளம் காப்பீடு செய்ய விழிப்புணர்வு
/
மக்காச்சோளம் காப்பீடு செய்ய விழிப்புணர்வு
ADDED : அக் 29, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரில் பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வேளாண் மாவட்ட இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார்.
இதில், நல்லுார் வட்டார வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் குறித்து விளக்கம் அளித்து, வரும் 31ம் தேதிக்குள் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்ய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

