
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பு.முட்லுார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், மாணவர்களுக்கு குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ குறித்த கல்வி விழிப்புணர்வுநிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் விமல்ராம் வரவேற்றார். பரங்கிப்பேட்டை வட்ட சட்ட பணிகள் வழக்கறிஞர் குணசேகரன், சட்டம் குறித்து, விளக்கி பேசினார்.
பரங்கிப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் செந்தில்குமாரி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் மஞ்சுளா, நன்றி கூறினார்.

