/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி

ADDED : அக் 28, 2025 06:23 AM

கடலுார்: கடலுார் அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.
கடலுார் அடுத்த மருதாடு, நல்லாத்துார், புதுக்கடை, துாக்கணாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு, வடிகால் வாய்க்கால் துார்வாருதல் குறித்து கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நல்லாத்துாரில் மழையால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
இதில், டாக்டர் பிரவீன் அய்யப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முத்துக்குமாரசாமி, மனோகர், முன்னாள் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், வேணு, ராம்குமார், அப்பு பங்கேற்றனர்.