/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி பிற்படுத்தப்பட்டோர் பேரவை சபதம்
/
தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி பிற்படுத்தப்பட்டோர் பேரவை சபதம்
தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி பிற்படுத்தப்பட்டோர் பேரவை சபதம்
தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி பிற்படுத்தப்பட்டோர் பேரவை சபதம்
ADDED : ஜன 14, 2026 05:33 AM

புவனகிரி: தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ள பழைய ஓய்வு ஊதிய திட்டம் என்பது ஒரு ஏமாற்று திட்டம் என, பிற்படுத்தப்பட்டோர் பேரவை அகில இந்திய பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் நடந்து வரும் விடியா திராவிட மாடல் ஆட்சியை அகற்றி செழிப்பு மிக்க, பசுமையான பா.ஜ., ஆட்சி மலர இந்த புத்தாண்டில் சபதம் ஏற்போம்.
அதற்கு தமிழகத்தில் ஜாதி, மதங்களை கடந்து கடுமையாக உழைப்போம். தமிழக அரசு, ஊழியர்களுக்கு அறிவித்துள்ள ஓய்வு ஊதிய திட்டத்திற்கு, ஊழியர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்டவை கிடைத்திடவும், வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் விரைவில் மத்திய அரசு செய்து தரும் என இந்த திருநாளில் நம்புவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.