ADDED : ஜன 14, 2026 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பத்தில், தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் சங்கத்தினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சங்க தலைவர் செல்வி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கீதா, ராஜகுமார் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

