/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்டரக்கோட்டை சாலையில் பேட்ஜ் ஒர்க் துவங்கியது
/
கண்டரக்கோட்டை சாலையில் பேட்ஜ் ஒர்க் துவங்கியது
ADDED : மார் 07, 2024 01:30 AM

பண்ருட்டி : கண்டரக்கோட்டை- பண்ருட்டி இடையிலான வி.கே.டி.சாலையில் சேதமடைந்த இடங்களில் சீரமைப்பு பணி நடந்தது.
விக்கிரவாண்டி- சேத்தியாதோப்பு இடையிலான வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. 2018 ல் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டெக்சர் நிறுவனம் பணியை துவக்கியது. ஆனால், இதுவரையில் முடிக்கவில்லை. சாலையை முறையாக பராமரிக்காததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக கண்டரக்கோட்டை- பண்ருட்டி வரையிலான பகுதியில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு மக்கள் பாதிப்பு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பு சார்பில் ஜல்லி கொட்டும் போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் அறிவித்த நிலையில் பண்ருட்டி தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் நகாய் சார்பில் விரைவில் பேட்ஜ் ஒர்க் செய்வதாக உறுதியளித்திருந்தனர். அதன்படி நேற்று கண்டரக்கோட்டை தென்பெண்ணை பாலத்தில் இருந்து குண்டும், குழியுமாக உள்ள பகுதியில் பேட்ஜ் ஒர்க் பணி துவங்கியது.

