ADDED : செப் 01, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி:பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம், மருங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி செயலாளர் ஜனார்த்தனன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் வாசுகி துளசி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் சசிகலா ஜெயசெழியன், கிளை செயலாளர் தமிழ்ச்செல்வன், தன்ராஜ் அன்பழகன், அமிர்தலிங்கம், கோபாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.