/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 65 லட்சத்தில் பணிகள் பண்ருட்டியில் பூமி பூஜை
/
ரூ. 65 லட்சத்தில் பணிகள் பண்ருட்டியில் பூமி பூஜை
ADDED : ஜூலை 14, 2025 03:43 AM

பண்ருட்டி : பண்ருட்டி ஒன்றியத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
பண்ருட்டி ஒன்றியம், அழகப்பசமுத்திரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம், கீழக்குப்பம் ஊராட்சியில் ரூ.16.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம், அரசடிக்குப்பம் ஊராட்சியில் அயோத்தி தாசர் திட்டத்தின் கீழ் ரூ.18.5 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கட்டுமான பணிகள் துவக்க விழா நடந்தது.
மொத்தம் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜையை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் செல்வகுமார், பொருளாளர் அய்யப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், முன்னாள் ஊராட்சி தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.