நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில், ரூ.1.89 கோடி மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்ட பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் தலைமை தாங்கினார். மாவட்ட மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் ஜனார்த்தனன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, விருத்தாசலம் மாவட்ட பதிவாளர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். அமைச்சர் கணேசன், பூமி பூஜையில் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வழக்கறிஞரணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம், பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகன், தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.